• Dec 26 2024

அப்பாவி நாகசைதன்யாவை ஏமாத்திட்டிங்களே.. ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த சமந்தா..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா இன்று சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடிய போது அப்பாவி நாகசைதன்யாவை ஏமாற்றி விட்டீர்களே என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சமந்தா கூறிய பதிலடி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையான சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனனின் மகன் நாகசைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் நான்கே ஆண்டுகளில் அவர் விவாகரத்து செய்தார். இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும் இருவருமே இன்னும் மறுமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமந்தா - நாகசைதன்யா பிரிவு குறித்து பல்வேறு வதந்திகள் இணையத்தில் உலவி வரும் நிலையில் இன்று சமந்தா ரசிகர்களிடம் உரையாடிய போது இது குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார்.



எங்கள் நாகசைதன்யா ரொம்ப அப்பாவியானவர், ஒரு அப்பாவி கணவரை நீங்கள் ஏன் ஏமாற்றினீர்கள்? அவரை ஏன் பிரிந்தீர்கள் என்பதை சொல்லுங்கள்? என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த சமந்தா, ’ஏற்கனவே நீங்கள் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டீர்கள், அப்போது நான் உங்களுக்கு யோகா செய்யுங்கள் என அறிவுறுத்தி இருந்தேன், ஆனால் தற்போது உங்களுக்கு யோகாவும் உதவாமல் போய்விட்டது, அதனால் இதைவிட வலிமையான ஒன்று தேவைப்படலாம் என்று நினைக்கிறேன், நல்லா இருங்க’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சமந்தாவின் இந்த பதிலடி செருப்படி ஏராளமானோர் ஆதரவையும் வரவேற்பையும் கொடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement