• Dec 26 2024

சமந்தாவின் திருமண உடை எப்படி மாறிவிட்டது தெரியுமா? நாக சைதன்யாவை இன்னும் மறக்கவில்லையா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா தனது திருமண உடையை வித்தியாசமாக மாற்றி பாதுகாத்து வைத்திருப்பதாகவும் அந்த உடையை கடைசி வரை பாதுகாப்பாக வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா ஆகிய இருவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் நான்கே வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் என்பதும் தெரிந்தது

இந்நிலையில் சமந்தா தனது திருமணத்தின் போது வெள்ளை நிற கவுன் அணிந்திருந்த நிலையில் அந்த ஆடை மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் சமந்தாவின் திருமண உடையை பின்பற்றி பலர் திருமண கவுனை செய்ததாகவும் கூட கூறப்பட்டது



இந்த நிலையில் தற்போது மன முறிவு ஏற்பட்டு விவாகரத்து ஆனாலும் கூட அந்த திருமண கவுனை சமந்தா பாதுகாத்து வைத்திருந்ததாகவும் ஆசை ஆசையாக வாங்கிய அந்த திருமண கவுனை மறுபடியும் அப்படியே மறு உருவாக்கம் செய்து சமீபத்தில் நடந்த விருது விழாவிற்கு அணிந்து வந்ததாகவும் தெரிகிறது

இந்த ஆடை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல், அதனால் மாற்றி அணிந்து வந்தேன் என்று அவர் தனது சமூக வலைதளத்தில் முகம் மலர்ந்து பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த ஆடையை அவர் கடைசி வரைக்கும் பாதுகாத்து வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவாகரத்து ஆனாலும் நாகசைதன்யாவின் குடும்பத்தினர் மீது இன்னும் அவர் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதையே இது காட்டுகிறது என்று சமந்தாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement