• Dec 26 2024

ஒரே இடத்தில் அஜித் குடும்பம் மற்றும் நெல்சன் - கவின்.. நேற்று ரசிகர்களுக்கு ஒரே ஜாலி தான்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்க்க அஜித் குடும்பத்தினர் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர் என்பதும் அதேபோல் கவின், நெல்சன், ரெடின் கிங்ஸ்லி முதல் சாக்ஷி அகர்வால், அஞ்சனா ரங்கன் வரை பலரும் வருகை தந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து பிளே ஆப் சுற்றுக்கு செல்ல சிஎஸ்கேவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் எப்போது போட்டி நடந்தாலும் அதை திரையுலக பிரபலங்கள் கண்டு ரசிப்பார்கள் என்ற நிலையில் நேற்று அஜித்தின் குடும்பத்தினர் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர். அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனுஷ்கா, மகன் ஆதிக் ஆகியோர் வருகை தந்த காட்சியை கேமராமேன் அழகாக படம் எடுத்து காட்டியதை அடுத்து கிரிக்கெட் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் கண்டு களித்தனர்.

அதேபோல் ’ஸ்டார்’ வெற்றி படத்தை அடுத்து கவின் சந்தோஷமாக இருக்கும் நிலையில் அவரும் மேட்ச் பார்க்க நேற்று வருகை தந்திருந்தார். அவருடன் இயக்குனர் நெல்சன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர்களும் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்றைய போட்டியை கண்டு ரசிக்க பிக் பாஸ் நடிகை சாக்சி அகர்வால், விஜே அஞ்சனா ரங்கன் உள்பட பலர் வருகை தந்திருந்தனர் என்பதும் குறிப்பாக அஞ்சனா ரங்கன் அவருடைய தோழியுடன் வந்திருந்த போது அவர்கள் இருவரையும் மாறி மாறி கேமராமேன் காண்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்ததும் பேட்டி அளித்த அஞ்சனா ரஞ்சன் குறைவான ஸ்கோர் டார்கெட் இருப்பதால் நேற்று தல தோனி விளையாட வர மாட்டார் என்று நினைத்தேன், அதேபோலவே அவர் வராதது எங்களுக்கு அதிருப்தியாக இருந்தது, ஆனாலும் சென்னை ஜெயித்ததில் எங்களுக்கு சந்தோசம்’ என்று கூறினார்.

Advertisement

Advertisement