• Dec 26 2024

’கங்குவா 2’ ரிலீஸ் ஆகும்போது போட்டியே இருக்காது: அதீத நம்பிக்கையா? திமிரா?

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

’கங்குவா' படத்தின் முதல் பாகத்திற்கு வேண்டுமானால் தெரியாமல் போட்டி போட சில படங்கள் வரலாம், ஆனால் இரண்டாம் பாகத்திற்கு போட்டி போட எந்த படமும் இருக்காது என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அதீத நம்பிக்கையோடு கூறியிருப்பதை நெட்டிசன்கள் திமிராக பேசுகிறார் என்று கமெண்ட் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இதே தேதியில் ’வேட்டையன்’ உள்பட சில படங்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ’கங்குவா’ படம் குறித்து பேட்டியளித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ’கங்குவா’ படம் மிகவும் பிரமாண்டமானது, உலக அளவில் கவரக்கூடிய அளவுக்கு இந்த படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.



மேலும் இந்த படத்தின் மதிப்பு தெரியாமல் ஒரு சில திரைப்படங்கள் அதே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது என்றும் ஆனால் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்று இரண்டாம் பாகம் வெளியாகும் போது இந்த படத்துடன் போட்டி போட எந்த படமும் பக்கத்தில் கூட வராது என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞானவேல் ராஜா அவர்களின் இந்த பேச்சு அதீத நம்பிக்கை போல் தெரிந்தாலும் திமிராக இருக்கிறது என்றும் இப்படித்தான் சூர்யாவின் ’அஞ்சான்’ படத்தை மிகப்பெரிய அளவில் பில்டப் செய்து அதன் பின் என்ன நடந்தது என்பது தெரியும் என்றும் ஞானவேல் ராஜாவுக்கு அப்படி ஒரு நிலைமை வர வேண்டாம் என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement