• Dec 26 2024

படவாய்ப்புக்காக வழிஞ்சிட்டு,சிரிச்சிட்டு நின்றால் நடக்கும் தானே- அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து ஓபனாகப் பேசிய சங்கீதா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சங்கீதா. இவர் பிதா மகன் படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.இது தவிர நெக்கட்டிவ் ரோலிலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் எனலாம்.

இவர் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.இது தவிர ரியாலிட்ரி ஷோக்களிலும் பங்குபற்றி வருகின்றார். இந்த நிலையில் இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார்.அதில்  அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.


அதில் அவர் கூறியதாவது,விருப்பம் இல்லாதவர்களை, யாரும் கையபுடிச்சி யாரும் இழுக்க மாட்டாங்க, அந்த அளவுக்கு யாருக்கும் தைரியம் இல்ல. நாம மற்றவர்களிடம் எப்படி பழகுகிறார் என்பதில் தான் விஷயம் இருக்கு, நாம சரியாக பழகினால், மற்றவர்களும் நம்மிடம் சரியாக பழகுவார்கள். படவாய்ப்பு தராங்கனு வழிஞ்சிட்டு,சிரிச்சிட்டு நின்ன, இவங்க நம்ம எது சொன்னாலும் செய்வோம் என்று தவறாக நினைத்துவிடுவார்கள். 

இதனால், நாம சரியாக இருக்கனும், இதுதான் நான், படவாய்ப்பு கொடுத்தா கொடுங்க, இல்லனா வேண்டாம் என்று நாம தெளிவா இருந்தா, யார் நம்ம கிட்ட வந்து தப்பா நடந்துப்பாங்க. என்கிட்ட யாரும் அப்படி தவறாக நடந்து கொள்ளவில்லை. அதையும் மீறி ஒரு சில விஷயம் நடந்தப்போ, எனக்கு அதில் விருப்பம் இல்லை என்பதை தெளிவாக அவர்களிடம் நான் சொல்லிவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement