• Dec 25 2024

ரியோவின் ஜோ படத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன சிவகார்த்திகேயன்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமானவர் ரியா ராஜ். தொடர்ந்து சின்ன திரையில் தடம் பதித்து வந்த அவர், தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பிளான் பண்ணி பண்ணனும் போன்ற படங்களில் நடித்துள்ளார். 


இவரது நடிப்பில் இறுதியாக ஜோ என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.இப்படத்தினை ஹரிஹரன் ராம் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரியோ ராஜ்ஜுடன் மாளவிகா மனோஜ், அன்பு தாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.


கல்லூரி காதல், பிரிவு, கண் கலங்க வைக்கும் நெகிழ்ச்சியான க்ளைமேக்ஸ் என படம் சூப்பராக உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.இந்த நிலையில் படத்தைப் பார்த்த சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்தோடு. ரியோ குடும்பத்தினருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement