• Dec 26 2024

மனமுருகி தாரை தாரையாக கண்ணீர் விட்ட சந்தானம்.. ஈஷா யோகா மையத்தில் ஒரே பக்திமயம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் சந்தானம் நேற்று ஈஷா யோகா மையத்தில் மனமுருகி தாரை தாரையாக கண்ணீர் விட்டு சிவபெருமானை தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை அருகில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஏராளமான சிவ பக்தர்கள் கண் விழித்திருந்து சிவனை வணங்கி பிரார்த்தனை செய்தார்கள் என்பதும் இதனால் ஈஷா யோகா மையம் விழாக்கோலமாக காட்சி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி தினத்தில் ஏராளமான அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்பதும் சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்தும் நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த நிலையில் நேற்று நடந்த மகா சிவராத்திரி விழாவில் நடிகைகள் தமன்னா, பூஜா ஹெக்டே, பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிலையில் நடிகர் சந்தானமும் கலந்து கொண்டார். நடிகர் சந்தானம் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி தினத்தில் தவறாமல் ஈஷா யோகா மையத்தில் வந்து மனம் உருகி பிரார்த்தனை செய்வார் என்பதும் அதேபோல் நேற்று அவர் ஓம் நமச்சிவாயா என்று மந்திரம் சொல்லி தாரை தாரையாக கண்ணீர் வழிய பிரார்த்தனை செய்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



சமீபத்தில் கூட சத்குரு கருத்துடன் முழுமையாக நான் உடன்படுகிறேன் என்றும் கோவில்களை பக்தர்களிடம் விட்டுவிடுங்கள், ஒரு பூஜை கூட நடக்காமல் பல வழிபாட்டு கோவில்கள் இருக்கிறது என்று கூறி நடிகர் சந்தானம் சர்ச்சைக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சந்தானம் தீவிர ஜக்கி வாசுதேவ் ஆதரவாளர் என்பதால் அவருக்கு ஒரு சில கண்டனங்கள் எழுந்தன என்பதும் ஆனால் அதன் காரணமாக அவருடைய படத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதும் சமீபத்தில் வெளியானவடக்குப்பட்டி ராமசாமிபடம் நல்ல வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement