• Dec 27 2024

’அந்தகன்’ இசையமைப்பாளர் நான் தான்.. ஆனால் அந்த பாட்டு என்னுதில்லை.. சந்தோஷ் நாராயணன்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!


பிரசாந்த் நடித்த ’அந்தகன்’ படத்தின் பாடல் நேற்று வெளியான நிலையில் அந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நேற்று வெளியான பாடல் நான் கம்போஸ் செய்தது போல் இல்லை என்றும் ஆனால் இந்த படத்தின் இசையமைப்பாளர் நான் தான் என்றும் ’படையப்பா’ படத்தின் காமெடி போல தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பாடலை நேற்று தளபதி விஜய் வெளியிட அந்த பாடல் இணையத்தில் வைரலானது.

இந்த பாடல் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதளத்தில் ’இந்த பாடலை கம்போஸ் செய்தது நான் தான், ஆனால் நான் கம்போஸ் செய்த மாதிரி இந்த பாடல் இல்லை’ என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பாடலின் இசை, பாடல் வரிகள், மிக்சிங், இசை கோர்வுகள் எதுவுமே நான் அமைத்தது இல்லை என்றும் அனைத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆனால் அதை நான் தான் செய்தேன் என்பதை பரிசோதிக்க கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவுக்கு ஏராளமானோர் படையப்பா படத்தில் வரும் வசனமான ’மாப்ள இவர் தான் ஆனா போட்டு இருக்குற சட்டை அவருடையது இல்லை’ என்ற வசனத்தை கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement