‘தெய்வத் திருமகள்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனுஷ்கா என்ற பாத்திரத்தில் உருகும் நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கலங்க வைத்த சாரா அர்ஜூன் தற்போது பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘Dhurandhar’ என்ற புதிய ஹிந்தி திரைப்படத்தில் சாரா அர்ஜூன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் First Look வீடியோ தற்போது வெளியான நிலையில் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ரன்வீர் மற்றும் சாரா இருவரும் வேறுபட்ட அவதாரங்களில் வலம் வருவதும் கதைக்கான எதிர்பார்ப்பை உருவாக்குவதும் குறிப்பிடத்தக்கது.
சாரா அர்ஜூனுக்கு இது பாலிவுட் திரையுலகில் ஒரு முக்கியமான முடிவாகக் காணப்படுகிறது. சிறு வயதிலேயே பிரபலமான இவர் இப்போது கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். First Look வீடியோ இதோ..
Listen News!