• Dec 27 2024

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சரத்குமார் மற்றும் ராதிகா.. எந்தெந்த தொகுதி..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

வரும் பாராளுமன்ற தேர்தலில் பல திரையுலக நட்சத்திரங்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னாள் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி பாஜக கூட்டணியில் இணைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் பாஜக கூட்டணியில் சரத்குமாரின் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த இரண்டு தொகுதிகளில் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் போட்டியிடப் போவதாகவும் கூறப்படுகிறது.

சரத்குமார் ஏற்கனவே நெல்லையில் போட்டியிட்டவர் என்பதால் அந்த தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே குஷ்பு, கௌதமி, காயத்ரி ரகுராம், ஷோபனா, சுரேஷ் கோபி, கங்கனா ரனாவத், மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வரும் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகிய இருவருமே தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் எந்தெந்த திரை நட்சத்திரங்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement