• Apr 18 2026

கண்ணீருடன் மயிலின் உண்மையை வெளிச்சம் போட்ட சரவணன்.! பரபரப்பான ஆட்டத்தில் டுடே எபிசொட்

shali / 4 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி சரவணனைப் பார்த்து சந்தோசமா இருக்கத் தான் கல்யாணம் பண்ணி வைக்கிறோம்.... 24 மணி நேரமும் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் எப்படி வீட்டில நிம்மதியா இருக்க முடியும் என்று கேட்கிறார். மேலும் என்னமோ உங்க ரெண்டு பேருக்கிடையிலயும் நடக்குது என்ன பிரச்சனை என்றதை தெளிவா பேசுங்க என்கிறார் கோமதி.


பின் மயில் இவளா நாளா என்ன கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தவர் இப்ப என்ர குடும்பத்தையும் கஷ்டப்படுத்த ஆரம்பிச்சிட்டாரு... இன்னைக்கு கடைக்கு வந்த என்ர அப்பாவ பேசி துரத்திவிட்டுட்டார் என்கிறார். அதைக் கேட்ட கோமதி சரவணனைப் பேச சரவணன் கோமதியைப் பார்த்து உனக்கு எதுவும் தெரியாது விடு என்கிறார்.

அதனை அடுத்து பாண்டியன் கோமதி கிட்ட இவங்க பிரச்சனையில நாம தலையிட வேண்டாம் என்கிறார். பின் கதிர் சரவணனைப் பார்த்து என்ன பிரச்சனை என்றாலும் எல்லாருகிட்டயும் சொல்லிடு மனசுக்குள்ளேயே வைச்சிருக்காத என்கிறார். அதைக் கேட்ட சரவணன் பாண்டியன் கிட்ட போய் என்னால உங்ககிட்ட சொல்லாமலும் இருக்க முடியல என்று சொல்லி அழுகிறார்.


இதனைத் தொடர்ந்து மயில் இந்தப் பிரச்சனையை நாங்களே சரி பண்ணுறோம் நீங்க விடுங்க என்று கோமதிகிட்ட சொல்லுறார். மேலும் மயில் சரவணன் கிட்ட போய் உங்களுக்கு என்ன பிடிக்கல என்று தானே இப்புடி எல்லாம் நடக்கிறீங்க என்கிறார். அதைக் கேட்ட சரவணன் ஏன் இப்புடி எல்லாம் நடிக்கிற என்று கோபமாக கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement