• Apr 18 2026

லண்டன் மக்களை ஆச்சரியப்படுத்திய ஷாருக்கான்–கஜோலின் வெண்கலச் சிலை.! வைரலான போட்டோஸ்

shali / 4 months ago

Advertisement

Listen News!

திரைப்பட ரசிகர்கள் அதிகம் வருகை தரும் லண்டனின் புகழ்பெற்ற லெஸ்டர் சதுக்கம் தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. சீன்ஸ் இன் தி ஸ்கொயர் என்ற தொகுப்பில் சிறப்பிக்கப்பட்ட பிரபல திரைப்படத்தின் நினைவாக, முதன்முறையாக இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 


பாலிவுட் வரலாற்றில் நிலைத்திருந்த காதல் திரைப்படமான ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ படத்தில் நடித்த ஷாருக்கான் மற்றும் கஜோல் ஆகியோரின் கதாபாத்திரங்களின் ஐகானிக் போஸை அடிப்படையாகக் கொண்ட இந்த சிலை உலக இந்தியர்களுக்கு பெருமிதத்தை அளிக்கிறது.

1995ஆம் ஆண்டு வெளியான இப்படம் உலகம் முழுவதும் பாலிவுட்டின் முகவரியாக திகழ்ந்த ஒன்று. 30 ஆண்டுகள் கடந்தும் இந்த படத்தின் பிரபலத்திற்கும், தாக்கத்திற்கும் எந்தக் குறையும் இல்லை. அந்த சிறப்பை கொண்டாடும் வகையில் இந்த வெண்கல சிலையை உருவாக்கி பொதுமக்களுக்கு அர்ப்பணித்துள்ளனர்.


இந்த பிரத்யேக வெண்கலச் சிலையின் திறப்பு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் நடிகை கஜோல் இருவரும் பங்கேற்றது விழாவை சிறப்பித்தது. இந்த சிலை இந்தியர்கள் மட்டுமல்லாது, லண்டனில் வாழும் தென் ஆசிய சமூகத்திற்கும் ஒரு கலாச்சார அங்கீகாரமாக கருதப்படுகிறது.

Advertisement

Advertisement