• Dec 26 2024

பிக் பாஸ் நிகழ்ச்சியால் மனமுடைந்த சரவணன் விக்ரம்.. அதிரடியாக எடுத்த விபரீத முடிவு? ரசிகர்கள் தான் முக்கிய காரணமா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பற்றிய போட்டியாளர்களுள் ஒருவர் தான் சரவணன் விக்ரம். இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றியதன் ஊடாக மனம் நொந்து சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார் சரவணன் விக்ரம். இதை பார்க்கும் போது சரவணன் விக்ரம் மொத்தமாவே மீடியாவை விட்டு விலகப் போகிறாரா என்று தான் தோணுகின்றது. 

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துக் கொண்டு இருந்த சரவணன் விக்ரமுக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதனால் குறித்த சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

எனினும், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அதிகமாக ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்ட போட்டியாளராக சரவணன் விக்ரம் தான் காணப்படுகிறார். 


பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையிலும் சரவணன் விக்ரமை வைத்து தான் அதிகளவான மீம்ஸ், ட்ரோல், கமெண்ட்ஸ் என்பனவும் குவிக்கப்பட்டு வருகின்றன.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது மாயாவும் பூர்ணிமாவும் சேர்ந்து சரவணன் விக்ரமுக்கு  கரப்பான் பூச்சி என்ற பெயர்  வைத்து கலாய்த்து வந்தார்கள்.

அதுக்கப்புறம் அவங்க இது தப்பு என உணர்ந்து அவ்வாறு அழைப்பதை நிறுத்தி இருந்தாலும், வெளியில் உள்ள ரசிகர்கள் தற்போது வரையில் அதை வைத்து தான் கலாய்த்து வருகின்றார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது சரவணன் விக்ரம், எந்த கருத்துக்களையும் பெரிதாக சொல்லாமலும், நிறைய இடங்களில் பேசாமல் இருந்ததாலும், ரசிகர்கள் அவரை மிக்சர் என்று அழைத்தனர்.


அதே நேரம், பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது சரவணன் விக்ரம்  தன்னைத் தானே டைட்டில் வின்னர் என்று சொல்லி வந்தார். அதையும் வைத்து கொடூரமாக கலாய்க்கப்பட்டார்.

இதை தொடர்ந்து, பிக் பாஸ் பேமிலி ரவுண்டில் மாயா கூட கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்குமாறு சரவணனின் தங்கை அறிவுரை கூறினார். 

அதுபோலவே இறுதியாக அவரும் சில நாட்கள் பூர்ணிமா மாயாவுடன் நட்பை துண்டித்தது போல அமைதியாக இருந்தார்.

ஆனா இறுதி பினாலே டைம் பிக் பாஸ்வீட்டிற்கு மீண்டும் வந்த சரவணன் விக்ரம், மாயாவுடன் பழகியது பலருக்கும் கோபத்தை தான் ஏற்படுத்தியது.


இதனால கோவமான சரவணன் விக்ரமின் தங்கையும், ஒருத்தருக்கு ஃபேமிலியை விட வேற ஒருத்தவங்களுக்கு இம்போர்ட்டண்ட் கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் தப்பான வழியில் போயிட்டு இருக்காங்க என்று போஸ்ட் போட்டிருந்தார்.

இவ்வாறு சரவணன் விக்ரம் தற்போது எந்த வகையில் போஸ்ட்  போட்டிருந்தாலும் ரசிகர்கள் அதற்கு, வேலை இல்லாதவன், மிக்சர் அப்படி என்று பேட்ஸ் கமெண்ட்ஸ்களை அடுக்கி வருகிறார்கள்.


இதனால் மனமுடைந்த சரவணன் விக்ரம் நான் இந்த பேஷன்ல இருந்து விலக்குறேன்... என்று பதிவு ஒன்றை போட்டு இருந்தார். 

எனினும் அதற்கும் ரசிகர்கள் அதிகமாகட்ரோ செய்து வந்தார்கள். ஒரு சில ரசிகர்கள் மாத்திரமே அவருக்கு ஆதரவாக நல்ல கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement