• Dec 26 2024

நடிப்பில் பட்டையை கிளப்பும் சீரியல் நாயகிக்கு கிடைத்த சூப்பர் அவார்ட்? கொண்டாடும் ரசிகர்கள்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு என்றே ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரொம்பவும் பாவமாக, அழகாக, எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது மீனாவுடைய கதாபாத்திரம் தான். அதாவது, இந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றவர் தான் நடிகை கோமதி பிரியா.

1993 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த கோமதி பிரியா, நடுத்தர குடும்பத்தை பின்னணியாக கொண்டவர். இவர், சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது  பெற்றோருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது, தம்பி தங்கச்சிகளை தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கடுமையாக உழைக்கவே ஆரம்பித்துள்ளார்.


இதைத் தொடர்ந்து சின்னத்திரையில் ஒரு மாடலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அந்த சின்ன ரோலையும் தவறாமல் தனது திறமையை காட்டி நடிச்சிருக்காங்க. 

ஒரு கட்டத்துல மொத்தமாகவே, தான் பார்த்துக் கொண்டு இருந்த வேலையை விட்டு,  சின்னத்திரையில் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். இதற்கு அவர்கள் வீட்டில் மறுப்பு தெரிவிக்காமல் நல்ல சப்போர்ட் கொடுத்து இருக்காங்க.


இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் சீரியல் மூலம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில பிரபலம் ஆனார் கோமதிப்பிரியா.

ஆனால் இவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது சிறகடிக்க ஆசை சீரியல் தான். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பல்வேறு இல்லத்தரசிகள், ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஒரு நடிகையாக வலம் வருகிறார் கோமதி பிரியா.

இந்த நிலையில், STAR ICON ACHIEVERS AWARD 2023. BEST ACTRESS OF THE YEAR 2023 என்ற அவார்ட் கோமதிப்பிரியாவிற்கு கிடைத்துள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement