• Dec 26 2024

உருட்டு உருட்டு காசா பணமா... கேப்டன் மில்லர் வசூல் நிலவரம்... பங்கமாய் கலாய்த்த புளூசட்டை மாறன் டுவிட்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தனுஷுன் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம்தான் கேப்டன் மில்லர். சாணி காயிதம், ராக்கி ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள திரைப்படம் இது. 12ம் தேதி இப்படம் வெளியானது.


வழக்கம்போல் இப்படம் இத்தனை கோடி வசூல் செய்தது என பலரும் பரப்ப துவங்கிவிட்டனர். படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் உலகம் முழுவதும் 71 கோடியை வசூல் செய்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இதுவும் உண்மையான தகவலா என்பது தெரியவில்லை.


இந்நிலையில், இந்த தகவலை பிரபல சினிமா விமர்சகர் மற்றும் தமிழ் டாக்கிஸ் யுடியூப் சேனல் புளூசட்ட மாறன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘உருட்டு உருட்டு’ என பதிவிட்டுள்ளார். ஜெயிலர், லியோ ஆகிய படங்களின் வசூல் நிலவரம் வெளியானபோதும் புளூசட்ட மாறன் அதை மறுத்து கிண்டலடித்தது குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement