• Dec 26 2024

TVK தலைவரை தொடர்ச்சியாக போட்டுத் தாக்கும் சீமான்..! நயன்தாராவுக்கு கூடாதா கூட்டமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்களால் ஆரம்பத்திலேயே மிகப் பெரிய  அதிர்வலைகளை சந்தித்துள்ளார். இது தமிழக அரசியல் கட்சிகளுக்கு இடையே தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் 2026 ஆம் ஆண்டில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தல் மிகப்பெரிய போட்டியாக நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் பேசிய தளபதி விஜய், நேரடியாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தை தாக்கி பேசி இருந்தார். மேலும் அவர் கட்சியை தாக்கி கிண்டலாக பேசிய விடயங்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறு மாநாட்டில் விஜய் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையாக வெடித்த நிலையில் திருமாளவன், சீமான் ஆகியோர் ஆரம்பத்தில் விஜய்க்கு தங்களுடைய வாழ்த்துக்களை குறிப்பிட்டு இருந்தாலும் தற்போது அவரை படுமோசமாக விமர்சித்து வருகின்றார்கள்.

d_i_a

அதிலும் சீமான் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ்நாட்டு விழாவில், விஜயை நேரடியாகவே தாக்கி பேசியிருந்தார். மேலும் விஜயின் கொள்கைகள் அழுகிய கூமுட்டைகள் என்றும் அவர் இப்போதுதான் அரசியலை ஆராய்ந்து கொண்டு உள்ளார். நான் அரசியலில் பிஎச்டி முடித்தவன் என்று கம்பீரமாக பேசியிருந்தார்.


இந்த நிலையில், விஜயகாந்த், நயன்தாராவுக்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடி உள்ளது என மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். அதன்படி, கூட்டத்தை வைத்து எந்த கணக்கும் போடக்கூடாது.. நயன்தாராவை பார்க்க நாலு லட்சம் பேர் கூடினார்கள்.. விஜயகாந்த்திற்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடி உள்ளது .. என கேள்வி எழுப்பி உள்ளார். இவ்வாறு விஜய் நடத்திய மாநாட்டின் எதிரொலியாக அவர் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றார் சீமான்.

எனவே இவ்வாறு எழுந்துள்ள விமர்சனங்களுக்கு தளபதி விஜய் முற்றுப்புள்ளி வைப்பாரா? அல்லது பொறுத்திருந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இவர்களை கதர விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement