• Oct 26 2024

சாதனை படைத்த "போகுமிடம் வெகு தூரமில்லை" ! புகழ்ந்து தள்ளிய மக்கள் செல்வன்!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில், இயக்குநர் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் வெளியான “போகும் இடம் வெகு தூரம் இல்லை” திரைப்படம். இந்த படத்தினை பார்த்த ரசிகர்கள் படத்தினை புகழ்ந்து தள்ளுகின்றனர். இந்நிலையில் மக்கள் செல்வந்தனும் படக்குழுவை பாராட்டியுள்ளார்.


2024 ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம். விமர்சகர்கள் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் கடந்த இப்படம் அக்டோபர் 8 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான வேகத்தில், இப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று.


அமேசான் தளத்தில் இந்திய அளவிலான டாப் டாப் 4 படங்களில் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளது. மேலும் இப்படம், வெளியான சில நாட்களுக்குள், 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழி பார்வையாளர்களையும் கவர்ந்திழுத்து, பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


இப்படத்தினை பார்வையிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, படக்குழுவினரை நேரில் அழைத்து, அவர்களுடன் படம் குறித்து உரையாடி, விமலின் நடிப்பைப் பாராட்டி, படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.


Advertisement