• Dec 26 2024

வெற்றி வாகை சூடி வா மகனே.. விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த தாயார் ஷோபா..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் இன்று ’தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவருக்கு வாழ்த்துக்களும் விமர்சனங்களும் மாறி மாறி குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அரசியல் கட்சி பிரபலங்களான சீமான், உதயநிதி ஸ்டாலின், திரை உலக பிரபலங்களான அர்ச்சனா கல்பாத்தி உட்பட பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சிலர் விமர்சனமும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், விஜய்யின் அரசியல் வருகைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ’விஜய் குறித்த பல கேள்விகளுக்கு நான் பதில் அளித்திருந்தாலும், அவரது அரசியல் வருகை குறித்து ஒரு அம்மாவாக மட்டுமின்றி சமூகப் பொறுப்புள்ள ஒரு பெண்மணி ஆகவும் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

எனக்கு அரசியல் தெரியாது என்று சொல்ல மாட்டேன், நான் மட்டும் அல்ல, ஒவ்வொரு குடிமகனும் அரசியல் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக விஜய் மாதிரி ஆளுமை உள்ளவர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும்.  

பொதுவாக புயலுக்கு பின் அமைதி என்று சொல்லுவார்கள். ஆனால் விஜய்யின் அமைதிக்கு பின் தான் ஒரு புரட்சி ஏற்பட போகிறது, விஜய்யின் ரசிகர்கள் இப்போது அவரது கட்சியின் தொண்டர்களாக மாறி உள்ளனர். விரைவில் அவர்கள் தலைவர்களாகவும் மாறுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.  

ஒரு குடிமகனாக மட்டுமின்றி ஒரு அம்மாவாகவும் விஜய்க்கு நான் ஓட்டு போட எதிர்பார்த்து காத்திருக்கிறேன். விஜய்க்கு நான் சொல்ல வேண்டியது எதுவும் இல்லை, அவருக்கு எல்லாம் தெரியும், வெற்றி வாகை சூடி வா விஜய்’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement