• Dec 25 2024

அடுத்தவர் பர்சனல் வாழ்க்கையில் மூக்கை நுழைத்தார்.. இதனால் தான் விசித்ராவோட சண்டை? உண்மையை உடைத்த தினேஷ்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 முடிந்து ஒரு வாரம் ஆகவுள்ள நிலையில், வெற்றியோடு திரும்பிய போட்டியார்கள் தற்போது பேட்டிகளை வழங்கி வருகின்றார்கள்.

அதன்படி, பிக் பாஸ் 3ர்ட் ரன்னர் ஆக வந்த தினேசும் பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

பிக் பாஸ் வீட்டில் எனக்கும் விசித்திராவிருக்கும் கருத்து வேறுபாடு தொடங்கியது, நான் கேப்டனாக இருந்த முதல் வாரத்தில் தான். ஒரு நாள் விசித்ரா கோவத்தில் வெளியே படுத்து இருந்தார். நானும் சமாதானம் செய்ய சாப்பாட்டை கொண்டு போய் காத்திருந்தேன்.ஆனால் அவர் தவறாக புரிந்து, மேலும் கோவப்பட்டார்..


இதை தொடர்ந்து, மாயா குரூப்போடு சேர்ந்து சர்க்கரை ஒழித்து வச்சி விளையாடினார். அவர் திருடவில்லை. ஆனால் தப்புக்கு உடந்தையாக இருந்தார். அந்த இடத்தில் நான் அதை பற்றி பேச பெரிய பூகம்பம் வெடித்தது. அவர் இதை தான் எதிர்பார்த்தார்.

மேலும், விசித்ரா தன்னை மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த ஒரு சிலருடைய பர்சனல் வாழ்க்கை குறித்தும் அங்கே தாக்கி பேசியிருந்தார். அதனால் தான் தனக்கு கோபம் ஏற்பட்டது. 

ஆனால் நான் எந்த இடத்திலும் விசித்ராவிடம் சென்று நானாக சண்டை போட்டது கிடையாது. அவராக என்னிடம் எதையாவது பேசும்போது நான் அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறேன் என்று தினேஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Advertisement

Advertisement