• Dec 27 2024

ரூ.250 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிகிறாரா சிம்பு? அவ்வளவு பணம் இருக்குதா? அடிச்சுவிடும் யூடியூபர்கள்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

ரூபாய் 250 கோடி பட்ஜெட் படத்தை சிம்பு தயாரிக்க இருப்பதாக தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சில யூடியூபர்கள்  கதை அளந்து விடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருந்த ’எஸ்டிஆர் 48’ என்ற படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.

ஆனால் சில காரணங்களால் இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவில்லை என்றும் இதனை அடுத்து சிம்பு நானே இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று முன்வந்துள்ளதாகவும் சில யூடியூபர்கள்  தெரிவித்துள்ளனர்.

250 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தை தயாரிக்கும் அளவுக்கு சிம்பு அவ்வளவு பெரிய சொத்து மதிப்பு உள்ளவரா? என்ற கேள்வியை திரையுலகில் உள்ளவர்களே எழுப்பி வருகின்றனர். மேலும் சிம்புவின் படம் அதிகபட்சமாக 100 கோடி ரூபாய் தான் வசூல் செய்திருக்கிறது என்றும் அந்த படம் ’மாநாடு’ என்றும் அப்படி இருக்கும்போது 250 கோடி ரூபாய் சிம்பு நடிக்கும் படத்தை தயாரிக்க யார் முன்வருவார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.



இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரிக்கும் மூன்று நிறுவனங்கள் தான் இந்த படத்தை தயாரிக்க முன் வந்திருப்பதாகவும், சிம்பு இந்த படத்தில் ஒரு பார்ட்னராக மட்டும் இணைந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிம்பு தனது சம்பளத்திற்கு பதிலாக இந்த படத்தின் பாட்னராக இணைய வாய்ப்பு இருப்பதாகவும் இதைத்தான் சில யூடிபர்கள் சிம்பு சொந்தமாக இந்த படத்தை தயாரிக்கிறார்கள் என்று கதை அளந்து வருகிறார்கள் என்றும் விபரம் அறிந்த திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement

Advertisement