• Dec 26 2024

மறுபடியும் காறித்துப்பிய மீனா.. இந்த முறை சிக்கியது யார்?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!


கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீனா மற்றும் ரோகிணி ஆகிய இருவரும் ஸ்ருதியை காறித்துப்பிய காமெடி ரீல்ஸ் வீடியோ வெளியான நிலையில் தற்போது மீண்டும் மீனா காறி துப்பிய வீடியோவை வெளியிட்டு இருக்கும் நிலையில் இந்த முறை சிக்கியது யார் என்ற கேள்வி ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பது ரேட்டிங்கிலும் முன்னணி இடத்தை பெற்று அனைவர் மனதிலும் இந்த சீரியல் இடம் பிடித்து விட்டது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

முத்து -மீனா,  மனோஜ் - ரோகிணி,  ரவி - சுருதி மற்றும் அண்ணாமலை - விஜயா ஆகிய எட்டு முக்கிய கேரக்டர்களை வைத்து சுவாரசியமான திரைக்கதையுடன் சீரியல் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த சீரியல் இன்னும் மிகப்பெரிய உச்சத்தை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வரும் கோமதி பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களை வைத்து இருக்கும் நிலையில் அவ்வப்போது படப்பிடிப்பின் இடையில் எடுக்கப்படும் ரிலீஸ் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவை பல லைக்ஸ்களை குவித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சற்று முன் ஒரு காமெடி வீடியோவை வெளியிட்டுள்ளார். ஹாய் ஹாய் என திரும்ப திரும்ப சொல்லும் ஒருவரிடம் மீனா ‘என்ன’ என்று கேட்க, அதற்கு அந்த நபர் ’ராத்திரி பூரா உன்னை நினைச்சு தூக்கமே இல்லை’ என்று கூறுபவரிடம் காறித்துப்பி விட்டு திரும்பி செல்வது போன்ற இந்த காமெடி வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement