• Dec 26 2024

முத்துவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீனா.. பாசத்தில் கண்கலங்கிய தம்பதிகள்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் ஒவ்வொரு வாரமும் ஒரு திருப்பம் ஏற்பட்டு பார்வையாளர்களை அசத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் மீனா திடீரென சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்ட நிலையில் அவரைத் தேடுவதற்காக முத்து அலைந்து வருகிறார் என்பது,. அதன் பின்னர் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் என்பதையும் இன்றைய எபிசோடில் உள்ளது என்பதை பார்த்தோம்.

காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்க வந்த மீனாவின் தம்பி சத்யாவுக்கும், முத்துவுக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் நிலையில் அதன் பின் என்ன நடக்கும் என்பதை நாளை தான் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில் ’சிறகடிக்க ஆசை’ சீரியலின் நாளைய முன்னோட்ட வீடியோவில் மீனாவை கண்டுபிடிக்க முடியாமல் முத்து சோகமாக வீட்டிற்கு வரும் நிலையில் அங்கு மீனா தண்ணீர் குடித்து கொண்டிருப்பதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைகிறார். மீனாவும் முத்துவை பார்த்து பாசத்தால் கண் கலங்கி நிற்க இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கி வந்து பின்னர் கட்டிப் பிடித்துக் கொள்கின்றனர்.

அதை பார்க்கும் ரவி திரும்பி கொள்ள அங்கு ஒரு பாச போராட்டம் நடைபெறுகிறது. இதனை அடுத்து இந்த முன்னோட்ட வீடியோவில் இருந்து மீனா மீண்டும் வீட்டுக்கு வந்து விட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எப்படி வந்தார் என்பதை நாளைய  எபிசோடில்   பார்ப்போம்.

Advertisement

Advertisement