• Dec 26 2024

தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள்.. அதற்குள் கூட்டணி, தொகுதி உடன்பாட்டை முடித்துவிட்டாரா விஜய்?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதற்கு முன்பே கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாட்டை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முடித்து விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய தளபதி விஜய் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் எட்டு சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்ற ஒரு அரசியல் கட்சி தலைவருடன் கூட்டணியை உறுதி செய்துள்ளாராம்.

இருவரும் சமீபத்தில் போனில் பேசிக் கொண்டதாகவும் விஜய்யிடம் அந்த அரசியல் கட்சி தலைவரும் கூட்டணி உறுதி என்று வாக்குறுதி கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி எந்தெந்த தொகுதிகள் யாருக்கு என்பது கூட கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அதை நோக்கி அடுத்தகட்ட அரசியல் நகர்வு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த தேர்தலில் மாநில அந்தஸ்து பெற்ற இன்னொரு கட்சியையும் வளைத்து போட இருவரும் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

தற்போது விஜய், மாணவ மாணவிகளுக்கு விழா எடுக்கும் பணியில் பிசியாக இருப்பதால் இந்த விழா முடிந்தவுடன் அடுத்த கட்டமாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் 2026 தேர்தலுக்கு இப்போதே கூட்டணியை உறுதி செய்து எந்தெந்த தொகுதி யாருக்கு என்பதையும் உறுதி செய்து பிரச்சாரத்தை தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement