• Dec 25 2024

அந்த படத்தின் காப்பி தான் இது... நெட்டிசன்களால் தாக்கப்படும் அயலான்... வேதனையில் சிவகார்த்திகேயன்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயனின் புதுத்திரைப்படமான அயலான் எதிர் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகவுள்ளது. அந்த திரைப்படம் ரிலீசுக்கு முன்னரே பல பிரச்சனைகளில் சிக்கி இருந்தது. இந்நிலையில் அதுகுறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அயலான் திரைப்படம் ஒரு ஹிந்தி திரைப்படத்தின் காப்பி என விமர்சனைக்குள்ளாகியது .


சிவகார்த்திகேயன் , ரகுல் பிரித் சிங்,சரத் கேல்கர் மற்றும் இஷா கோபிகர் நடித்துள்ள அயலான் திரைப்படம் ஜனவரி 12ம் திகதி வெளியாகவுள்ளத . ஆர் ரவிக்குமார் இயக்கிய இந்த அறிவியல் புனைகதை திரைப்படம் தமிழ்நாட்டின் வேற்றுகிரகவாசிகள் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தைக் காட்டுகிறது. திடீரென்று தோன்றும் சிவகார்த்திகேயனின் கதாப்பாத்திரம், ரகு, வேற்றுகிரகவாசியை எதிர்கொள்கிறார், மேலும் அவர்கள் ஒரு ஆபத்தான தாக்குதலில் இருந்து பூமியைப் பாதுகாக்க படைகளுடன் இணைகிறார்கள்.


23 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகிற்கு இஷா கோப்பிகர் மீண்டும் வருவதையும் ட்ரெய்லர் வெளிப்படுத்துகிறது. அயலான் திரைப்படம் பல பிரச்சினைகள் தாண்டி தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் பட பிடிப்புகள் ஆரம்பமாகியே கிட்டத்தட்ட 3 வருடங்கள் கடந்துள்ளது.


ஒரு தயாரிப்பாளர் மாறி இன்னொரு தயாரிப்பாளர் வந்து ஆரம்பத்திலே பல இன்னல்கள் எதிர்கொண்டது. பல இன்னல்களை சந்தித்த இந்த படம் ஜனவரி 12 பொங்கலை முன்னிட்டு வெளிவரவுள்ளது . இந்நிலையில் நெட்டிசன்கள் இந்த திரைப்படத்தை இவ்வாறு ட்ரோல் செய்துள்ளனர்.


 "வழி தவறி பூமிக்கு வந்த ஏலியன ஆராய்ச்சி பண்ணனும் என்று நினைக்கிற ஒரு கூட்டத்துக்கிட்ட இருந்து காப்பாத்தி திரும்ப அவங்க கிரகத்துக்கே அனுப்ப இரண்டு நண்பர்கள் அந்த ஏலியனோட சேர்ந்து அடிக்கிற லூட்டி தான் இந்தத் திரைப்படம் ஹாலிவுட் ஏலியன் திரைப்படங்களை நையாண்டி அடித்து எடுக்கப்பட்ட ஒரு நல்லதொரு பொழுதுபோக்கு காமடி படமாகும் . அதனாலேயே அயலான் படம் காப்பி படம் என சர்ச்சைக்குள்ளாகியது .

Advertisement

Advertisement