• Dec 26 2024

பிக் பாஸ் விட்டு வெளியேறிய விச்சுமா... ரசிகர் போட்ட கமெண்ட்... ரிப்ளை செய்த விசித்ரா...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரையில் இல்லாத அளவிற்கு 18 போட்டியாளர்கள், 2 வீடு, 5 வைல்ட் கார்ட் என்ட்ரி என பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது தான் பிக் பாஸ் சீசன் 7.


இதில் பங்குபற்றிய போட்டியாளர்களுள் நடிகை விசித்ராவும் ஒருவராக காணப்படுகிறார். இம்முறை இவருக்கும் பிக் பாஸ் டைட்டில் வின் பண்ணுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அவர் இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிட் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 50 வயதை கடந்த போட்டியாளராக விசித்ரா காணப்படுவதோடு, பிக் பாஸ் வீட்டில் 95 நாட்களைக் கடந்துள்ளார் என்பதும் ஆச்சரியமான விடயம் ஒன்றாகும். பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய போட்டியார்கள் பலரும் விசித்ராவை மம்மி என்றே அழைப்பார்கள். அவரும் அதற்கு ஏற்ற வகையில் அறிவுரை, சமையல் என அசத்தி வந்தார்.


மேலும் ஒரு பிக் பாஸ் ரிவியூ செய்யும் நபராக இருந்த விசித்ரா, இத்தனை நாட்களாக அம்மா வேடம் போட்டு அனைவரையும் முட்டாள் ஆக்கியுள்ளார் எனவும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் விசித்ராவின் எலிமினேஷன் அன்(f)பேயார் என்று விசித்ரா ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர். இந்த கமென்ஸ்களுக்கு விசித்ரா லைக் செய்துள்ளார். இதனால் அவரும் இந்த எலிமினேஷனை ஏற்றுகொள்ள வில்லை என்பது தெரிகிறது.  

Advertisement

Advertisement