• Dec 25 2024

விரைவில் நிறைவடைகிறது சிவகார்த்திகேயனின் #SK23 படப்பிடிப்பு ! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இளவரசன் என தற்போது புகழப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் இருந்து திரைத்துறையில் நுழைந்து தனது திறமை மற்றும் உழைப்பாலும் தனக்கான ஓர் ரசிகர் படையை உருவாக்கி கொண்டார்.குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் இன்றைய முன்னணி நடத்திரங்களின் திரைப்பயண தொடக்கம் சிவகார்திகேயனை போல் இவ்வளவு வேகமான வளர்ச்சியாய் அமைந்ததில்லை.

SK23 - IMDb

தற்போது தனது 25 வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ள சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள "அமரன்" திரைப்படமானது இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் திகதி உலக அளவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் #SK23  படத்தின் முக்கிய செய்தியொன்று வெளியாகியுள்ளது.


சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் முதல் படமான #SK23  ஒரு  ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது.ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் சார்பில் என்வி பிரசாத் தயாரிக்கும் இப் படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக  ருக்மணி வசந்த் நடிக்க படத்திற்கான இசையை அனிருத் வழங்குகிறார்.

Sivakarthikeyan, AR Murugadoss film ...

தமிழ்நாட்டின் பல பாகங்களில் படமாக்கப்பட்டு வந்த #SK23  இன்  படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் தூத்துக்குடியில் படப்பிடிப்பு நிறைவடைந்து இன்று முதல் படப்பிடிப்பு  தாம்பரத்தில் தொடங்கியிருக்கிறது.மேலும் 25 நாள் படப்பிடிப்பு தாம்பரத்தில் இடம்பெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதுவரை படத்தின் படப்பிடிப்பு 80% நிறைவடைந்துள்ளது படம் 2025 ஜனவரியில் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement