• Mar 06 2025

தனது தேவதைகளை வரவேற்ற சினேகன் கன்னிகா தம்பதியினர்! எமோஷனல் வீடியோ

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமாக காணப்படும் சினேகன் கன்னிகா தம்பதியினர் தங்களது இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த சந்தோஷத்தில் காணப்படுகின்றார்கள். இவர்கள் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இரண்டு வீட்டார்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இதை தொடர்ந்து கிட்டத்தட்ட மூன்று, நான்கு ஆண்டுகள் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தங்களுடைய வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வந்தார்கள். ஆனாலும் சமீபத்தில் கன்னிகா தான் கர்ப்பமாக இருப்பதாக தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இதை அடுத்து கன்னிகாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது.  பிரசவத்திற்காக கன்னிகாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்ற வீடியோ மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த தருணங்களையும் சினேகன் தனது இன்ஸ்டா  பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.


இந்த நிலையில் தங்களுடைய இரட்டைக் குழந்தைகளை புதிதாக வீட்டுக்கு அழைத்து வந்ததை கேக் வெட்டி கொண்டாடியதோடு கன்னிகாவை கவனித்துக் கொண்ட நெர்ஸ்களுக்கு பரிசுகளையும் வழங்கியுள்ளனர். 

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதோடு ரசிகர்களும் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement