• Dec 27 2024

ப்ளூ சட்டை மாறன் படத்திற்கு அவ்வளவு மவுசா? ஆன்டி இண்டியன் படத்தை வாங்கிய அம்பானி? முழுவிபரம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் பிரபல திரை விமர்சகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் ப்ளூ சட்டை மாறன்.

அவர் ஒரு படத்துக்கு பாசிட்டிவாக விமர்சனம் கொடுப்பது மிகவும் அரிதான ஒன்று. தமிழில் கூடுதலான படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து விளாசித் தள்ளுவார்.

அந்த காலங்களில் சன் டிவியில் திரை விமர்சனம் பார்த்து படம் பார்க்க சென்ற காலங்கள் மாறி தற்போது youtube இல் விமர்சனங்களை பார்த்து தான் அநேகமானோர் படம் பார்க்கச் செல்வதா? இல்லையா? என்ற முடிவுக்கு வருகிறார்கள். அந்த அளவுக்கு தற்போதைய காலங்களில் யூடியூப் விமர்சனங்களுக்கு மவுசு அதிகமாக உள்ளது.

இவ்வாறு தினசரி வெளியாகும் படங்களின் விமர்சனங்களை விமர்சித்து பேமஸ் ஆனவர்தான் ப்ளூ சட்டை மாறன். இவருக்கு ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் அதை கிழித்து தொங்க விட்டுவிடுவார். அதுபோலவே ஒரு சில படங்களுக்கு பாசிட்டிவ் விமர்சனம் அளிப்பார். அதுவும் மிக அரிது.


கடந்த 2021 ஆம் ஆண்டு ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் ரிலீஸ் ஆன படம் தான் ஆன்டி இண்டியன் திரைப்படம். இது தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது.

அதாவது, பெரும்பாலான படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனம் அளிக்கும் ப்ளூ சட்டை மாறனுக்கு, நீங்க ஏன் ஒரு நல்ல படத்தை இயக்கக் கூடாது? என ரசிகர்களால் விடுக்கப்பட்ட சவாலுக்கு இணங்கவே, அவர் இயக்கிய திரைப்படம் தான் ஆன்டி இண்டியன்.


எனினும், ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் திரைப்படம் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு தான்  ஓடிடியில் ரிலீஸ் ஆனது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தை அம்பானிக்கு சொந்தமான  ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் தற்போது ஸ்டிரீம் ஆகி வருவதாக ப்ளூ சட்டை மாறனே தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

எனவே ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்திற்கு ஓடிடியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement