• Dec 26 2024

அரை டவுசர் போட்ட காலத்திலேயே எனக்கு ’அந்த’ அனுபவம் இருந்தது.. சூரி வெளியிட்ட வீடியோ..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூரி தனக்கு அரை டவுசர் போட்ட காலத்திலேயே அந்த அனுபவம் இருந்தது என்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் அந்த அற்புதமான அனுபவம் இன்று கிடைத்துள்ளது என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவு செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக கடந்த பல ஆண்டுகளாக வலம்ம் வந்தவர் சூரி என்பதும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. 

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவர் ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக ’விடுதலை’ படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் ‘விடுதலை’ இரண்டாம் பாகம் ’கருடன்’ ‘கொட்டுக்காளி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ள சூரி தனது சினிமா மற்றும் வாழ்க்கை அனுபவங்களை அவ்வப்போது பதிவு செய்து வருவார் என்பதும் சமீபத்தில் கூட அவர் தன்னால் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தை வெளியிட்ட வீடியோ வைரலானது என்பதையும் பார்த்தோம். 

இந்த நிலையில் இன்று மதுரையில் வைகை அழகர் ஆற்றில் இறங்கும் அனுபவத்தை நேரில் பார்த்த சூரி அதுகுறித்த  பதிவில் கூறி இருப்பதாவது: அரை டவுசர் வயதில் அப்பாவின் தோள் மீது உட்கார்ந்து , முதன்முதலில் அழகரை பார்த்தேன். “இவர்தான்டா அழகர்..நல்லா பாரு” என்றார் அப்பா... மறக்க முடியாத நாள் அது... அதுக்கப்புறம் இப்போது தான் இவ்வளவு அருகில் அழகரை பார்க்கிறேன் .. பேரானந்தம்.. நம்ம கள்ளழகர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!! 

சூரியின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் ’மதுரை வீரன்’ என்றும் ’மதுரை மண்ணின் விடுதலை நாயகன்’ என்றும் ’நாங்களும் கிட்டத்தட்ட பல வருடங்களுக்கு பிறகு இப்போது தான் இந்த நிகழ்வை பார்க்கிறோம்’ என்றும் ’நீங்கள் தரிசனம் செய்தது நாங்களே நேரில் தரிசனம் செய்தது மாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டது’ என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.



Advertisement

Advertisement