• May 20 2026

அடேங்கப்பா.!! நயன்தாராவுடன் செம ரொமான்டிக்காக போஸ் கொடுக்கும் விக்கி.. லீக்கான ஸ்டீல்கள்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக திகழ்பவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். காதலிலிருந்து திருமணம் வரை இவர்களின் பயணம் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசுபொருளாக இருந்து வருகிறது. 


கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணம், கோலிவுட்டில் மிக அதிகம் கவனம் பெற்ற நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது. திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலக் என அழகிய பெயர்களை சூட்டினர்.

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த ஜோடி, அடிக்கடி தங்களின் அழகிய தருணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து எடுத்துள்ள புதிய ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 


இந்த புகைப்படங்களில், இருவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் ரொமான்டிக்காகவும் காணப்படுகின்றனர். குறிப்பாக நயன்தாராவின் ஸ்டைலும், விக்னேஷ் சிவனின் க்யூட்டான எக்ஸ்பிரஷன்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “கோலிவுட்டின் அழகிய ஜோடி” என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி ட்ரெண்டாகி வருகின்றன.

Advertisement

Advertisement