• May 20 2026

இந்த முறை வேறலெவல் ஹைப்.. லீக்கான விஜய் ஆண்டனியின் பட அப்டேட்டால் கிறங்கிப்போன ரசிகர்கள்

shali / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் விஜய் ஆண்டனி. ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், தனது வித்தியாசமான இசை பாணியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பின்னர் நடிகராகவும் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக பல ஹிட் திரைப்படங்களை வழங்கி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘சக்தித் திருமகன்’ மற்றும் ‘மார்கன்’ திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், பாக்ஸ் ஆபிஸிலும் பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்தன. இந்த வெற்றி விஜய் ஆண்டனியின் மார்க்கெட்டையும் ரசிகர் பட்டாளத்தையும் மேலும் உயர்த்தியுள்ளது.


இதனால் அவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் புதிய படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, அவரது அடுத்த திரைப்படத்தின் டைட்டில் அல்லது ஃபர்ஸ்ட் லுக் தொடர்பான அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் “இந்த முறை எந்த மாதிரியான கதையுடன் விஜய் ஆண்டனி வரப்போகிறார்?” என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது இந்த அப்டேட் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement