• Apr 17 2026

சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு இப்படி ஒரு கொண்டாட்டமா .. SK21 டீமோட மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படம் பொங்கலையொட்டி கடந்த 12ம் தேதி வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. சிறப்பான வசூலையும் பெற்று வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்த நாள் அன்று வேற லெவல் பிளான் வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 


கடந்த ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படமும் மிகப்பெரிய வரவேற்பை சிவகார்த்திகேயனுக்க பெற்றுத் தந்துள்ளது.  இந்நிலையில் அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் சிவகார்த்திகேயன் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளது.


இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சாய் பல்லவி ஜோடி சேர்ந்துள்ளார்.


படத்தின் 90 சதவிகித சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்னும் 10 சதவிகித சூட்டிங் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி சிவகார்த்திகேயன் தன்னுடைய பேட்டியில் எஸ்கே21 படம் சோதனை முயற்சியாகவே உருவாகிவருவதாக தெரிவித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன்.


இந்தப் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் வரும் மார்ச் மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


இதனிடையே எஸ்கே 21 படத்தின் டைட்டில் அறிவிப்பு அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த செய்து சிவா ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக இருக்கும்.  

Advertisement

Advertisement