தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா தற்போது பல மொழிகளில் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முக்கியமான படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது மலையாள சினிமாவிலும் முன்னணி ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார்.
இந்த நிலையில் தமன்னா நடித்து வரும் 'ஒடேலா 2' திரைப்படம் தற்போது மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது. இது 2022 ஆம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளிவந்த 'ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்' என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மேலும் அதன் பிறகு வெளியாகிய டீசர் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
சமீபத்தில் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது மற்றும் தற்போது ட்ரைலர் வெளிவந்துள்ளது. இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மில்க் பியூட்டி என்று அழைக்கப்படும் தமன்னா இந்த படத்தில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் அசத்தியுள்ளார்.
Listen News!