• Jan 18 2025

சுந்தர். சி ஒரு வார்த்த சொன்னா எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு வருவேன்! விஷால் கொடுத்த ஷாக்

Aathira / 7 hours ago

Advertisement

Listen News!

சுந்தர். சி, விஷால், சந்தானத்தின் கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் மதகஜராஜா திரைப்படம். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வரலட்சுமி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தார்கள். கிட்டத்தட்ட 12 வருடங்களை கழித்து வெளியான இந்த படம் பொங்கல் ரைஸில் வின்னராக ஜொலித்து வருகின்றது.

2013ஆம் ஆண்டு ரிலீஸுக்கு தயாராக இருந்த மதகஜராஜா திரைப்படம் சட்ட மற்றும் நிதி சிக்கல்கள் காரணமாக வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இறுதியில் ஒரு வழியாக 12ஆம் தேதி இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. தற்போது வரையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

இந்த படத்தில் மிகப்பெரிய பலமாக சந்தானத்தின் காமெடி காணப்படுகின்றது. அதில் முழுக்க முழுக்க ஸ்கோர் செய்திருப்பதும் சந்தானம் தான். மேலும் மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் தங்களுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்ததனால் காமெடிக்கு பஞ்சம் இல்லை.


இதன் மூலம் சுந்தர். சியின் படம் என்றாலே சிரிப்புக்கு கேரண்டி என்பது இந்த படத்தின் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. இந்த படம் தற்போது வரையில் 20 கோடிகளை வசூலித்து இருப்பதாக கூறப்பட்டது. பொங்கல் ரேஸில் வெளியான திரைப்படங்களில் மதகஜராஜா திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிலையில், மதகஜராஜா படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட விஷால், கௌதம் வாசுதேவ மேனனுடன் தனது அடுத்த படம் உருவாகின்றது என்றும், துப்பறிவாளன் 2 படமும், அதைத்தொடர்ந்து அஜய் ஞானமுத்துடன் ஒரு படமும் நடிக்க உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.


மேலும் சுந்தர்.சியுடன்  மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும் என்று காத்திருக்கிறேன். அவர் ஓகே சொல்லிவிட்டார் என்றால் எல்லாத்தையும் தூக்கி வீசி விட்டு கிளம்பி வந்துடுவேன் மக்களும் அதைத்தான் ஆசைப்படுகின்றார்கள். 

மதகஜராஜா படத்தை தியேட்டர்களில் பார்த்த மக்கள் சுந்தர். சி, விஜய் ஆண்டனி காம்போவில் மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும் என ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement