• Apr 18 2026

சன்னி லியோன் வெளிட்ட ஷாக்கிங் வீடியோ... சன்னி லியோன் தலையில் மாறி மாறி அடிக்கும் 5 பேர்... நடந்தது என்ன...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சன்னி லியோன் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் நிலையில் அவரை பின்புறம் உள்ள ஐந்து நபர்கள் மாறி மாறி அவரது தலையில் அடிக்கும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது


இந்திய திரையுலகின் பிரபல நடிகையான சன்னி லியோன் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ’வீரமாதேவி’ என்ற தமிழ் படம் உட்பட சுமார் 9 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றின் சில படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோனுக்கு 55 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹெல்மெட் அணிந்து ஒருவர் உட்கார்ந்து கொள்ள மீதமுள்ளவர்கள் அடிக்கும் வீடியோ உள்ளது. தன்னை யார் சரியாக அடிக்கிறார் என்று கண்டுபிடித்தால் அவர் ஹெல்மெட் அணிந்து உட்கார வேண்டும் என்பது தான் விளையாட்டு.


அந்த வகையில் சன்னிலியோனை உட்கார வைத்து அவரது நண்பர்கள் மாறி மாறி அடிக்க அவரால் நீண்ட நேரம் சரியாக யார் அடித்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரது பின்புறம் உள்ள நண்பர்கள் மாறி மாறி அடித்துக் கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.


இந்த வீடியோவை சன்னிலியோன் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து ஒரு மணி நேரமே ஆகிய நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement