• Dec 26 2024

அம்மா சின்னதுல என்ன இங்க விட்டுட்டு போனாங்க... மனசில் உள்ள கவலையை வெளிப்படையாக கூறும் முத்து... முத்துவின் பாசத்தை புரிந்து கொள்வாரா விஜய்யா.... Siragadikka Aasai- Promo

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டீவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் என்ன நடக்கிறது என பார்ப்போம் வாங்க.


பொங்கல் பண்டிகையை பாட்டி வீட்டில் கொண்டாட சென்ற குடும்பம் அங்கு அவருடன் இருந்து பண்டிகையை கொண்டாடுவதுதான் கதை நகர்கிறது. அதில் இன்று போட்டிகள் முடிந்து எல்லோரும் ஒன்றாக இருந்து கதைத்து கொண்டு இருக்கிறார்கள்.


அப்போது சுருதி நாம ஒரு கேம் விளையாடலாம் என்று ட்ரூத் ஆர் டேர் கேம் பற்றி சொல்கிறார். ரவி இந்த கேம் குறித்த விளக்க பிறகு சுருதி நானே விளையாட்டை தொடங்குகிறேன் என்று ரவியிடம் ட்ரூத்தா? டேரா? என கேட்கிறார். 


அப்போது பாட்டி முத்து உன் மனதில் என்ன இருக்கு சொல்லு பாப்போம் என்று கேட்கிறார். அப்போ முத்து உங்களுக்கு ஞாபகம் இருக்கா பாட்டி இதே போல ஒரு பொங்கல் நேரம் தான் அம்மா என்ன இங்க கொண்டு வந்து விட்டாங்க அப்போ நான் சின்ன பிள்ள அம்மாவ மட்டும் கேட்டுகிட்டே இருப்பேன். 


அப்போது எல்லாம் அம்மாக்கு என்ன ரொம்ப புடிக்கும் இப்போதுதான் இப்படி இருக்குறாங்க என்று சொல்லி கவலை படுகிறார்.அதனை பார்த்த விஜய்யவும் சொல்வதறியது கண்கள் கலங்கி இருக்கிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. 


Advertisement

Advertisement