• Apr 24 2026

தூத்துக்குடிக்கு திடீரென விமானத்தில் சென்ற சூப்பர் ஸ்டார்! இது தான் ரகசிய காரணமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 170வது படமான 'வேட்டையன்'. இந்த படத்தை 'ஜெய்பீம்' என்ற முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற, இயக்குநர் செ.ஞானவேல் இயக்குகிறார்.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக  நடிகை மஞ்சு வாரியர்  நடிக்கிறார். அத்துடன், வேட்டையன் டைட்டில் டீசரில், சால்ட் ரூ பெப்பர் லுக்கில் மிரட்டியிருந்தார் ரஜினி. இதனால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


இந்நிலையில், தனது 170வது படமான வேட்டையன் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி சென்றுள்ள சூப்பர் ஸ்டாரரஜினிக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

அதன்படி, வேட்டையன் படத்திற்கான அடுத்தகட்ட  ஷூட்டிங் தூத்துக்குடியில் இன்று ஆரம்பமாக, அதற்கு விமானம் மூலம் சென்றுள்ளார் ரஜினி.

அதேவேளை, இந்தப் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Advertisement