• Dec 26 2024

சூப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர் 2'.. உறுதி செய்தார் அதே பட நடிகை! மீண்டும் ஹவுஸ்ஃபுல் ஆகுமா ரஜினி படம்?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவானது தான் ஜெயிலர் திரைப்படம்.

கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்று,  உலக அளவில் 600 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது அந்த படத்தில் நடித்த நடிகை, அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக  உறுதியான தகவல் ஒன்றை பேட்டியில் கூறியுள்ளார்.


அதாவது,  ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த நடிகை மிர்ணா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தான் நெல்சன் அவர்களிடம்பேசும் போது,  ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய திரைக்கதை அமைக்கும் பணிகளில் இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.

இதன் மூலம், ஜெயிலர் 2ம் பாக திரைப்படத்தின் பணிகளில் நெல்சன் இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது.


மேலும்,  ஜெயிலர் படத்தில் வாய்ப்பு கிடைத்தது போல்  ஜெயிலர் 2 படத்திலும் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த படத்தை நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார் நடிகை மிர்ணா.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

அந்தப் படத்தை முடித்துவிட்டு அவர்  ஜெயிலர் 2 படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement