• Jan 12 2025

சாலிகிராமத்தையே வாங்க விலை பேசும் சூரி..! பார்த்திபன் உடைத்த உண்மை

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சினிமாவில் சாதிக்க வேண்டும் என கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள் ஏராளம். அதிலும் தற்போது நடிகர் சூரியின் அசுர வளர்ச்சி பலராலும் வியக்கப்பட்டு வருகின்றது.

ஆரம்பத்தில் காமெடியனாக கலக்கி வந்த நடிகர் சூரி,  தனக்கு  கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி இன்று ஹீரோவாக மாஸ் காட்டி வருகின்றார். பிரபல நடிகர்களே எடுக்க தவறிய முயற்சிகளை எல்லாம் எடுத்து அதை தனது வெற்றி படிகளாக மாற்றியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்த சூரி அந்தப் படத்தின் கதாநாயகனாகவே காணப்பட்டார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவரை பரோட்டா சூரி என அழைக்கப்பட்டவர் அதற்குப் பிறகு விடுதலை சூரி என அழைக்கப்பட்டார்.

அதன் பின்பு கருடன் படம் மெகா ஹிட் ஆனது. இந்த படத்தின் பல காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள் என்பவற்றை தாண்டி ருத்ரதாண்டவம் ஆடி இருந்தார் சூரி. இதை தொடர்ந்து கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழுமலை, விடுதலை 2 ஆகிய படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ளது.


இந்த நிலையில், நடிகர் சூரி குறித்து பார்த்திபன் அளித்த பேட்டி ஒன்றில், சூரியன் இந்த நிலைமை பார்ப்பதற்கு சந்தோஷமாக இருந்தது. அவர் அண்மையில் அமெரிக்காவில் இருந்த ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவரின் வளர்ச்சியை பார்த்து சந்தோஷப்படுகின்றேன்.

கிராமத்தில் இருந்து வந்த ஒருவர் அடைந்திருக்கும் உயரம் ஆச்சரியமாக உள்ளது. இப்போது சூரியன் எட்டு கோடி ரூபாய்க்கு சம்பளம் வாங்குகின்றார். அது இனி வரும் காலங்களில் 10 கோடி, 15 கோடி என அதிகரித்துக் கொண்டே செல்லும். அவர் சாலிகிராமத்தில் இடம் வாங்கினார். இப்போது சாலிகிராமத்தை வாங்க விலை பேசிக்கொண்டு இருக்கின்றார் எனக் குறிப்பிட்டு உள்ளார். 

Advertisement

Advertisement