• Dec 25 2024

சூர்யா பிறந்த நாளில் சூர்யா ரசிகர்களுக்கு கிடைத்த மெகா கிப்ட் ! என்னனு தெரியுமா ?

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகன் சூர்யா அவர்களின் பிறந்ததினமான இன்று சூர்யாவின் அடுத்தடுத்த படக்குழு மற்றும் திரைத்துறையினர் ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்தவாறுள்ள தருணத்தில் சூர்யாவின் படங்களுக்கான அறிவிப்புகள் அப்டேட்கள் என்பன வெளியாகி இன்றைய நாளை மேலும் சிறப்பாகியுள்ளது.

Suriya and Vetrimaaran's 'Vaadivaasal ...

காலையில் வெளியான "கங்குவா" படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்திருக்க தற்போது வெளியாகியிருக்கும் அடுத்த செய்தி சூர்யா ரசிகர்களுக்கு எல்லாம் ஒரு மெகா கிப்ட் என்றே சொல்லலாம்.

Vaadivaasal: சப்ஜெக்ட்டுக்கு ...

அதாவது அண்மையில் யூ டியூப் வலைதள சானல் ஒன்றிக்கு கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் வழங்கிய நேர்காணல் ஒன்றில் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது "வாடிவாசல்" திரைப்படம் சூர்யாவுடன் என திட்டவட்டமாக கூறியிருந்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில்  "படத்துக்காக 3 நாட்கள் படப்பிடிப்பில் இருந்தோம், சில ஆபத்தை எதிர்கொண்டோம். எனவே மாற்று முறையை பயன்படுத்துகிறோம். சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறோம்.இதற்கிடையில் வெற்றிமாறன் விடுதலை2ஐ முடித்துவிட்டு இணைவார்"   என குறிப்பிட்டிருந்தார் தாணு. 


Advertisement

Advertisement