• Apr 24 2026

கம்பீரமான தோற்றத்தில் இளசுகளைக் கவர்ந்த சூர்யா.! வைரலான "கருப்பு" பட போஸ்டர் இதோ.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

வித்தியாசமான கதைக்களங்கள் மற்றும் மாறுபட்ட கலைநயத்துடன் உருவாகும் திரைப்படங்களுக்காக பெயர் பெற்ற இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, தற்போது நடிகர் சூர்யாவை வைத்து உருவாக்கும் புதிய திரைப்படம் தான் ‘கருப்பு’.

இந்தப் படம் ஜனவரி 23, 2026 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்து ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் ஆரம்பத்திலிருந்தே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

‘கருப்பு’ படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது, திரிஷாவுடன் சேர்ந்து சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 


இவர்களின் கலவையான நடிப்பு , படத்திற்கு கூடுதல் வண்ணத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இப்படத்திற்கு இசையை சாய் அபயங்கர் வழங்கியுள்ளார். 

இந்நிலையில், படக்குழு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் சூர்யா மிகவும் கம்பீரமாக காணப்படுகின்றார். ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த போஸ்டரை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement