• Dec 26 2024

சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் - முதலாவது திருமண நாளை ரொமாண்டிக்காக கொண்டாடிய ஹன்சிகா- வெளியாகிய வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகா சிம்புவை காதலித்து பிரேக்கப்பும் செய்தார். அதன்பின் உடல் எடையை குறைத்து மஹா படத்தில் மீண்டும் சிம்புவுடன் ஜோடிப்போட்டு நடித்தார்.


கடந்த ஆண்டு டிசம்பர் ஹன்சிகா சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஹனிமூன் சென்று பிஸியாக இருந்த ஹன்சிகா, தன் திருமணத்தின் வீடியோவை ஹாட் ஸ்டாரில் வெளியிட்டார்.

தொடர்ந்து கெரியரில் கவனம்செலுத்தி வரும் ஹன்சிகா வெப் சீரியல்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.இந்த நிலையில் ஹன்சிகா இன்றைய தினம் தன்னுடைய முதலாவது திருமண நாளை கணவருடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.


எனவே அவரது கணவர் சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்.அவர் கையால் எழுதிய 5 கடிதங்களை ஹன்சிகாவிடம் கொடுத்திருக்கிறார். மேலும் கேக் வெட்டி அவர்கள் திருமண நாளை கொண்டாடி இருக்கின்றனர். அது மட்டுமின்றி champagne பாட்டில் உடன் அவர்கள் கொண்டாடி இருக்கும் வீடியோவும் வைரல் ஆகி இருக்கிறது.


Advertisement

Advertisement