• Dec 25 2024

பழனிச்சாமி சொல்லவுள்ள சர்ப்ரைஸ் நியூஸ்..! பாக்கியாவுடன் கைகோர்த்த ராதிகா! இனி நீ செத்தடா கோபி..

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய தினம் வெளியான எபிசோட் வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்..

அதன்படி, பாக்கியா மேல உள்ள கோவத்தை கோபியுடம் சொல்லி புலம்பிக் கொண்டு இருக்கிறார் ஈஸ்வரி. இதை பார்த்து பொறுக்காத ராதிகா இப்ப பாக்கியாவால என்ன பிரச்சனை, அவங்க அவங்க வேல பிசினஸ்ச பாக்குறாங்க, நீங்க ஏன் இப்ப அவங்கள பாக்குறீங்க..உங்க பிசினஸ்ச முதல்ல ஒழுங்கா பாருங்க என கோபிக்கு சொல்ல.. அப்படியே இரண்டு பேரும் அமைதியாக அடங்கிப் போகின்றனர். மீண்டும் ஈஸ்வரி கதைக்க முற்பட அவங்களை தூங்குமாறு சொல்ல சத்தம் இல்லாமல் இரண்டு பேரும் தூங்குகின்றனர்.


இன்னொரு பக்கம் இனியாவும் பாக்கியாவும் கதைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதில் நான் பெரிய தொழில் அதிபரா வருவன்..அப்ப நீ எங்க அம்மா இது தான் என்று நாலு பேர்ட்ட பெருமையா சொல்லுவா என சொல்லிக் கொண்டு இருக்கிறார் பாக்கியா. இதை தொடர்ந்து செழியனுக்கு டீ கொண்டு போய் பாக்கியா கொடுத்து விட்டு கிளம்ப அவரது கையை பிடித்து உட்காருமாறு சொல்கிறார் செழியன்.


அதன்பின், நான் வேணும் என்று ஒன்றுமே பண்ணல சாரிமா என பாக்கியாவிடம் சொல்கிறார். ஜெனி பற்றியும் கவலை படுகிறார். மேலும் என்கிட்ட பேசாம இருக்காத அம்மா என கெஞ்சுகிறார். ஜெனி கண்டிப்பா வருவா ஒரு நாள் என அவருக்கு ஆறுதல் சொல்லுகிறார்.


இதை தொடர்ந்து, சமையலறையில் இருக்கும் பாக்கியாவிடம் வந்து காபி போடுமாறும் அப்படியே கோபிக்கும் போடுமாறும் சொல்கிறார் ஈஸ்வரி. என்னால முடியாது அத்த..அதுக்கு தானே ராதிகா இருக்கா என சொல்ல, அவ விடிய வார்க்கிங் போனவ இன்னும் வரல.. நீ வீட்டுக்கு வாறவங்களுக்கு காபி போட்டு குடுக்கிற மாதிரி போட்டு குடு என சொல்லி விட்டு செல்கிறார்.

இதையடுத்து, வேறு வழியின்றி கோபிக்கு காபி கொண்டு போய் கொடுக்க அதை வாங்கி சுவைத்துக் குடிக்கிறார் கோபி. அந்த நேரத்தில் வீட்டிற்கு உள்ளே வந்த ராதிகா ஓ .. காபி போட்டு தந்தாச்சா.. இதுக்கு தான் நானும் ஓடி வந்தன்.. இல்ல நான் இன்னும் கொஞ்சம் வார்க்கிங் போய்ட்டு வந்து இருப்பன் என்று சொல்ல, அவன் காலைல 7 மணிக்கு எல்லாம் காபி குடிப்பான்..நீ அது எல்லாம் பண்ற மாதிரி இல்ல என ஈஸ்வரி திட்ட ராதிகாவுக்கு காபியை நீட்டுகிறார் பாக்கியா. இது எழிலுக்கு போட்ட காபி வேணும்னா குடிங்க என்று சொல்ல அவரும் எடுத்து குடிக்கிறார். இத பார்த்து ஈஸ்வரியும் கோபியும் ஷாக் ஆகின்றனர்.


மறுபக்கம், பாக்கியா வீட்டிற்கு வருகிறார் பழனிச்சாமி.அங்கு வந்து ஒரு விஷயம் கதைக்கனும் டைம் இல்ல உடனே வாங்க என கூப்பிட, மாமா நான் போய்ட்டு வரவா என மாமனாரிடம் கேக்க, அவரும் ஓம் என சொல்கிறார். அந்த இடத்தில் இருந்த கோபி என்ன செய்வது என்று தெரியாமல் பாக்கியாவிடம் சென்று தடுக்க முற்பட, அதை பார்த்த ராதிகா கரண்டியால் மிரட்டுவது போல காட்டுகிறார். இவ்வாறு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

Advertisement

Advertisement