• Dec 26 2024

முதல் முறையாக சூர்யா படத்திற்கு இசையமைக்கும் பிரபலம்.. வேற லெவல் குத்துப்பாடல் உறுதி?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

முதல்முறையாக சூர்யாவின் அடுத்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் ஒரு குத்துப்பாட்டு உறுதி என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 44’ என்ற படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அநேகமாக அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் ’எப்போது போல் உங்க படத்தில் சம்பவம் பண்ணுங்க. குறிப்பாக ஒரு ஆட்டம் போட வைக்கும் பாடலை வையுங்கள்’ என்று சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளதை அடுத்து நிச்சயமாக இந்த படத்தில் குத்து பாட்டு ஒன்று இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் மேலும் ஒரு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த படத்தில் நட்சத்திரங்கள் குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சூர்யா தற்போது ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் ’புறநானூறு’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அதனை அடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement