நடிகர் அஜித் துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸில் மூன்றாம் இடம் பிடித்ததற்காக பரபரப்பான வாழ்த்துக்கள் குவிந்துள்ளன. அஜித்தின் வெற்றியை ரஜினி, பிரசன்னா, கீர்த்தி சுரேஷ் ,கமல், பவன் கல்யாண் மற்றும் பல பிரபலங்கள் வாழ்த்தியுள்ளனர்.
அது மட்டுமல்லாமல் மாதவன்,அர்ஜுன் தாஸ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற சினிமா பிரபலங்கள் நேரில் சென்று அஜித்தின் ரெஸிங்கை பார்வையிட்டுள்ளதுடன் அநேகமானவர்கள் சமூக வலைத்தளங்களிலும் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து "Success is born out of faith, an undying passion, and a relentless drive" என்று ஸ்டீபன் கூறியதை இன்று உண்மையாக்கி இருக்கின்றார்.என்று சூர்யா தனது ஸ்டோரி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!