வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கின்றார். இதற்கான அறிவிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. ஆனாலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிப் போய்க் கொண்டே உள்ளன.
இதைத்தொடர்ந்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனாலும் இந்த படத்தின் இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் தயாரிப்பாளர் கலைபுலி ஆகியோர் வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில், வாடிவாசல் படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்றைய தினம் வெளியாக உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வாடிவாசல் திரைப்படம் சூர்யா, வெற்றிமாறன், கலைப்புலி ஆகிய மூவர் பயணத்திலும் திரை உலகிலும் முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது சூர்யா ரெட்ரோ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகின்றார். மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
ரெட்ரோ படத்தின் படப்பிடிப்புகளை முடித்த பிறகு வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜல்லிக்கட்டு காளையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!