• Dec 26 2024

தெரியாம சிறுத்தை சிவா கிட்ட மாட்டிகிட்டேன்.. ‘கங்குவா’ படம் பார்த்த சூர்யா அதிருப்தியா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும்கங்குவாஎன்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் வெளிநாடு மற்றும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் நடந்து வருகிறது என்றும் இந்த படம் மிகப் பிரமாண்டமாக சூர்யா ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் சூர்யா படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் குறிப்பாக கிராபிக்ஸ் காட்சிகள் பொம்மை போல் உள்ளது என்றும் கண்டிப்பாக ரசிகர்கள் இதைப் பார்த்தால் கேலியும் கிண்டலும் செய்வார்கள் என்றும் இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் தனது அதிருப்தியை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 
அதுமட்டுமின்றி மேக்கிங் கூட தனக்கு திருப்தியாக இல்லை என்று சூர்யா தனது நெருக்கமானவரிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் ஊடகங்களில் பேட்டி அளிக்கும் போது சூர்யாகங்குவாபடம் சிறப்பாக வந்திருப்பதாகவும் தமிழ் சினிமாவில் இது ஒரு மைல் கல் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது அறிந்ததே.




அதே நேரத்தில் தனது மனதிற்குள் இந்த படம் தேராது என்ற எண்ணம் தான் சூர்யாவுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் தெரியாமல் சிறுத்தை சிவாவிடம் மாட்டிக் கொண்டதாகவும் அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருவதாக தெரிகிறது.

 
தற்போது மிகவும் எளிதாக ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவை கதையம்சம் கொண்ட சின்ன பட்ஜெட் படங்கள் அபாரமாக வெற்றி பெற்று வரும் நிலையில் பிரமாண்டமான படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு குறைந்து கொண்டே வருகிறது. இந்த நேரத்தில் தேவையில்லாமல் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் மாட்டிக் கொண்டோம் என்ற எண்ணம் தான் சூர்யாவின் மனதில் இருப்பதாக கூறப்படுகிறது.

 
இருப்பினும் சிறுத்தை சிவாவுக்கு இந்த படத்தின் மீது அதிக நம்பிக்கை இருப்பதாகவும் கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும் என்றும் அதன் பிறகு சூர்யாவே தனக்கு பாராட்டு தெரிவிப்பார் என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருவதாக தெரிகிறது.

 

Advertisement

Advertisement