• Dec 26 2024

கால்ஷீட் வேணுமா? ஒன்றரை கோடி ரூபாய்க்கு வாட்ச் வேணும்.. மாமியாரிடம் கண்டிஷன் போட்ட ஜெயம் ரவி?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!


நடிகர் ஜெயம் ரவி தொடர்ச்சியாக தோல்வி படங்கள் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அவரிடம் கால்ஷீட் கேட்டு வருபவர்களிடம் அவர் சம்பளத்தை கறாராக பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் உருவானபூமி’ ’அகிலன்’ ’இறைவன்’ ‘சைரன்ஆகிய நான்கு படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளன. தற்போது தயாராகி வரும்பிரதர்மற்றும்ஜெனிபடத்திற்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஜெயம் ரவி தன்னிடம் கால்ஷீட் கேட்டு வருபவர்களிடம் கறாராக நடந்து கொள்வதாகவும் குறிப்பாக தன்னுடைய சம்பளத்தை குறைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஜெயம் ரவி படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருவதால் அவர் தனது சம்பளத்தை பாதியாக குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்ட போது கண்டிப்பாக சம்பளத்தை குறைக்க முடியாது என்று ஜெயம் ரவி பதிலளித்து விட்டதாக கூறப்படுகிறது.




இந்த கண்டிஷன் மற்ற தயாரிப்பாளர்களுக்கு மட்டுமின்றி தன்னுடைய படங்களை தயாரித்து வரும் மாமியாருக்கும் அதையே தான் கூறி இருப்பதாகவும் சம்பள விஷயத்தில் மாமியார் இடம் கூட அவர் கறாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 
இந்நிலையில் ஜெயம் ரவியை குளிர்ச்சிப்படுத்த அவரது மாமியார் அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்ச் வாங்கி பரிசாக கொடுத்திருப்பதாகவும் இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த ஜெயம் ரவி தனது மாமியாரின் அடுத்த படத்திற்கு கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் சம்பளத்தை குறைத்துள்ளதாகவும் தெரிகிறது.

ஒன்றரை கோடி ரூபாய் வாட்ச் பரிசளித்து 4 கோடி ரூபாய் சம்பளத்தை அவர் புத்திசாலித்தனமாக குறைத்து விட்டார் என்றும் இதே முறையை மற்ற தயாரிப்பாளர்களும் பயன்படுத்தலாம் என்றும் கோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர்.

ஜெயம் ரவி இன்னும் ஒரே ஒரு வெற்றி கொடுத்து விட்டால் அவரது மார்க்கெட் உச்சத்திற்கு சென்று விடும் என்றும் அந்த ஒரு வெற்றி எப்போது வரும் என்பதுதான் கேள்விக்குறி என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

 

Advertisement

Advertisement