• Jan 15 2025

திறமை மட்டும் தான் நம்ம காப்பதும்; பிஆர் கிடையாது.! பிக்பாஸ் ADK சொன்ன நச் எக்ஸாம்பிள்

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் பங்கு கொள்ளும்  போட்டியாளர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நோக்கில் போட்டி போட்டு பங்கேற்று வருகின்றார்கள்.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இறுதி அத்தியாயத்திற்குள் நுழைந்துள்ளது. இதில் ஆறு போட்டியாளர்களே  இறுதிப் பைனலுக்குள் நுழைந்து உள்ளனர். அதிலும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் வெற்றி பெற்ற ராயன் முதலாவது ஆகவே பைனலுக்குள் நுழைந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் திறமையை காட்டி பல போட்டியாளர்கள் வெற்றி பெற்றாலும் ஒரு சில போட்டியாளர்கள் தங்களுக்கான பிஆர் வைத்து வெற்றி பெற்றதாக பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. கடந்த சீசனில் கூட மாயா, அர்ச்சனா ஆகியோருக்கு பி ஆர் இருந்ததாக கூறப்பட்டது.


பிக்பாஸ் எட்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட சௌந்தர்யாவுக்கும் பிஆர் இருப்பதாக கூறப்பட்டது. அதனை அவர் சக போட்டியாளர்களிடம் உளறிக் கொட்டிய வீடியோவும் இணையத்தில் வைரலானது. மேலும் சௌந்தர்யா திறமை அற்றவராக வெறும் கியூட்னஸ் மூலமே பைனல் வரை வந்ததாக போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் பங்கு பற்றிய இலங்கையைச் சேர்ந்த தமிழ் ராப் பாடகரான ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் என்ற ADK தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் பிஆர் பற்றியும் திறமைக்கு மொழி கிடையாது  திறமையானவர்கள் எங்கு இருந்தாலும் எப்படி இருந்தாலும் முன்னுக்கு வருவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு உதாரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொழி தெரியாமல் தமிழ் நாட்டுக்கு வந்த போது அவர் தனது உழைப்பாலும் திறமையாலும் மட்டுமே  உச்சநிலையை அடைந்தார் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement