• Jun 12 2026

காதலனுடன் பிரிவியூ ஷோ பார்க்க சென்ற தமன்னா! எந்த படத்திற்கு தெரியுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அவரே நடித்து வெளியிட்ட  திரைப்படம் தான் அரண்மனை 4. இந்த திரைப்படத்தில் சுந்தர்.சியுடன் தமன்னா, ராசி கண்ணா, யோகி  பாபு, கோவை சரளா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். இந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட 100 கோடி வரை வசூலில் வெற்றி கண்டிருந்தது.

தமிழில் பிரபல ஹீரோயினாக காணப்படும் தமன்னா, பாலிவுட் வெப் சீரிஸான 'லஸ்ட் ஸ்டோரியில்' நடிக்கும் போது அவருக்கு ஜோடியாக நடித்த விஜய் வர்மாவுடன் நட்பு ஏற்பட அது பின்பு காதலாக மாறியது. கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வரும் நிலையில், இந்த வருடம் இவர்களுக்கு திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அரண்மனை 4 படத்தின் ஹிந்தி பதிப்பின் பிரிவியூ ஷோ பார்ப்பதற்காக தனது காதலருடன் சென்றுள்ளார் நடிகை தமன்னா. தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


தமிழில் வெளியாகி வசூலில் 100 கோடி ரூபாய் வரை சொல்லியடித்த அரண்மனை 4 படத்தின் ஹிந்தி பதிப்பு நாளைய தினம் 31ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளமை குறிப்பிட்டத்தக்கது.


Advertisement

Advertisement